Popular Posts

Saturday, November 30, 2013

RTI Letter for New Ratio Card

Note:- (புதிய குடும்ப அட்டை கேட்டு விண்ணப்பித்து 60 தினங்கள் கடந்தும் குடும்ப அட்டை அளிக்கப்படவில்லை எனில் அனுப்பிட
வேண்டிய தகவல் பெறும் உரிமைச் சட்ட விண்ணப்பம்)
 ------------------------------------------------------------------------------------------------------------

தவகல் பெறும் உரிமை  சட்டம் 2005-ன் பிரிவு,
பதிவு அஞ்சல் ஒப்புதல் அட்டைவுடன் தேதி:  ________

அனுப்புநர்

             ______________________
             _____________________
             Post
             Taluk -Pincode
             Dist

பெறுநர்

           பொது தகவல் அதிகாரி
           தகவல் பெறும் உரிமை சட்டம்
          மாவட்ட வட்ட வழங்க்கல் அலுவலகம்
          _________ மாவட்டம்


ஐயா

பார்வை:  புதிய குடும்ப அட்டை கேட்டு நான் கொடுத்த விண்ணப்பத் தேதி ​​​​​​, ஒப்புதல் எண்:​​​​​​____ - தொடர்பாக.

         புதிய குடும்ப அட்டை கேட்டு நான் விண்ணப்பித்து 70 தினங்கள் கடந்தும் குடும்ப அட்டை அளிக்கப்படவில்லை, இதைப் பற்றியும் இப்பொருள் மீது தங்கள் அலுவலகத்தில் மேற்கொள்ளும் நடவடிக்கைகள்  பற்றியும் அறிய,  தவகல் பெறும் உரிமை  சட்டம் 2005-ன் கீழ் தகவல் அளிக்க வேண்டுகிறேன்.

1.) மேற்காணும் எனது விண்ணப்பித்திற்கு எண் அளிக்கப்பட்ட பகிர்மான பதிவேட்டின்,  பதிவு செய்யப்பட்ட தன்பதிவேட்டின் ,
 சிறப்புப் பதிவேட்டின் , சம்பந்தபட்ட பக்கத்தின் ஓளி நகல்.  

2.) மேற்காணும் எனது விண்ணப்பித்திற்கு எந்த அலுவலர் , என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் , எனும் நடைமுறைகளை காட்டும் ஆணையீன் ஒளி நகல்

3.) மேற்காணும் எனது விண்ணப்பித்தின் மீது விசாரணை செய்த அலுவலர்கள் பெயர், பதவி, அலுவலக விலாசம், விசாரணை செய்த தேதி ஆகியத் தகவல்களையும் , அவர்களின் நாட்குறிபின்  அந்த நாட்களின் ஒளி நகல்.

4.) புதிய குடும்ப அட்டை கேட்டு விண்ணப்பித்து எத்துனை நாட்களுக்குள் அளிக்கவேண்டும், அளிப்பதை எந்தக் காரணங்களால் நிறுத்தி வைக்கலாம்,  நிராகரிக்கலாம் என்று கூறும் அரசு ஆணைகளின் ஒளி நகல்.

5.) மேற்காணும் எனது விண்ணப்பதினைக்  கையாண்ட தங்கள் அலுவலகக் கோப்பின் அணைத்துப் பக்கங்களின் ஒளி நகலையும், அலுவலக் குறிப்புக் கட்டுடனும், வருவாய் ஆய்வாளரின் தன்பதிவேட்டில், சிறப்புப் பதிவேட்டில்  எனது விண்ணப்பம் பதியபட்டுள்ள பக்கத்தின்

6.) நிர்ணயக்கப்பட்ட காலத்திற்குள் எனக்கு குடும்ப அட்டை அளிக்காமல் இன்று வரை கால தாமதம் செய்யும் அலுவலரின் பெயர், பதவி, அதற்குப் பதிவு செய்யப்பட்டுள்ளக் காரணம் ஆகியத் தகவல்களை தாங்கிய ஆவண நகல்.

7.) நான் கோரிய புதிய குடும்ப அட்டை  எனக்கு அளிப்பதற்கு  தங்கள் அலுவலகத்திற்குத் தடையாக உள்ள கரணங்கள் அதை நியாயப்படுத்தும் அரசு ஆணையின் ஓளி நகல்.

8.) _______ம் தேதி முதல் ________ தேதி வரை தங்கள் அலுவலக " புதிய குடும்ப அட்டை " வழங்கல் பதிவேட்டின் ஓளி நகல்

9.) மாவட்ட , கோட்ட, வட்ட , மண்டல துணை வட்ட ஆட்சியர் மற்றும் பீர்க்கா  வருவாய் அலுவலரின் , தொலை பேசி , செல்போன் , எண்கள் பட்டியல்


எனக்கு ஈமெயில் வசதியும் திறமையும் இல்லை . கோரியத் தகவல்களை அஞ்சலில் அனுப்பிவைக்கக் கோருகிறேன். தங்கள் கவனம் சட்டபிரிவு 19(8) , மற்றும் 6(3) க்குக் கோருகிறான்.

இந்த விண்ணப்பித்ற்கானக் கட்டணமாக ரூ.10/- க்கான நீதிமன்றக் கட்டண வில்லை  ஒட்டப்பட்டுள்ளது என்றும் கனிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்  


தங்கள் உண்மையுள்ள

( _______________________)

Sunday, November 3, 2013

RTI Letter for New Ratio Card - 1st Appeal Letter

Note : (முதல் கடிதம்  அனுப்பி 30 நாட்கள் கழித்து எந்த தகவலும் வர வில்லை என்றால் அனுப்ப வேண்டிய கடிதம்)

கீழ் முதல் மேல் முறையீடு

தவகல் பெறும் உரிமை  சட்டம் 2005-ன் பிரிவு 19(1) ன் கீழ் முதல் மேல் முறையீடு
பதிவு அஞ்சல் ஒப்புதல் அட்டைவுடன் தேதி:  ________

அனுப்புநர்

______________________
_____________________
Post
Taluk -Pincode
Dist

பெறுநர்

மேல் முறையீடு அலுவலர்
தகவல் பெறும் உரிமை சட்டம்
மாவட்ட வட்ட வழக்கல் அலுவலகம்
_________ மாவட்டம்


ஐயா,

பார்வை : எனது தவகல் பெறும் உரிமை  சட்ட விண்ணப்பம் தேதி : _________

புதிய குடும்ப அட்டை கேட்டு நான் கொடுத்த விண்ணப்பத்தின் மீது இது நாள் வரை எனக்கு குடும்ப அட்டை வழங்கபடவில்லை.
இதை பற்றி நான் தவகல் பெறும் உரிமை  சட்டம் 2005-ன் தகவல் அளிக்க வேண்டி, எனது கடிதம் தேதி: _______ அனுப்பி இது நாள் வரை பதில் இல்லாத காரணத்தால் தங்களுக்கு இந்த மேல் முறையிடு செய்யப்படுகிறது தங்கள் துறையின் பொதுத் தகவல் அலுவலரால், அளிக்கப்படாத மேற்குறிபிட்ட தகவல்களை முழுமையாக சட்டப்பிரிவு 7(6) ன் படி செலவுத்  தொகையின்றி எனக்கு அளிக்கக் வேண்டுகிறேன்



தங்கள் உண்மையுள்ள


(__________)



Enclosure: 1. Photo copy of my previous application under the RTI act 2005,dated : __________