Popular Posts

Thursday, December 5, 2013

உங்கள் நகராட்சி, மாநகராட்சி, பேரூராட்சி செயல்பாடுகள் குறித்து அறிய இந்த பொது நலம் சார்ந்த தகவல் அறியும் உரிமைச் சட்ட விண்ணப்பத்தை பயன்படுத்தவும்...

உங்கள் நகராட்சி, மாநகராட்சி, பேரூராட்சி செயல்பாடுகள் குறித்து அறிய இந்த பொது நலம் சார்ந்த தகவல் அறியும் உரிமைச் சட்ட விண்ணப்பத்தை பயன்படுத்தவும்...

பொது நலன் சார்ந்த தகவல் உரிமைச் சட்ட விண்னப்பம்
பதிவு அஞ்சல் ஒப்புகை அட்டையுடன் நாள்:

அனுப்புநர்,
……………………………………
………………………………………

பெறுநர்,
பொது தகவல் அலுவலர்,
தகவல் உரிமைச் சட்டம்-2005,
………………..மாவட்ட ஆட்சியர் அலுவலக,
………………..மாவட்டம்.
ஐயா,
பொருள்:- “வெளிப்படையான நிர்வாகம் இலஞ்சம் ஊழலைத் தவிர்க்கும்” 
தகவல் அறியும் உரிமைச் சட்டம் – 2005

1) தகவல் உரிமைச் சட்டத்தின் பிரிவு 6(1) இன் கீழ்……..பஞ்சாயத்து/ பேரூராட்சி/ நகராட்சி/ மாநகராட்சி சார்ந்த பின்வரும் ஆவணங்களின், பதிவேடுகளின், ஒளி நகல்களை, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அளிக்கக் கேட்டுக்கொள்கிறேன்.

அ) ……..ஆம் தேதி முதல் ………. ஆம் தேதி வரையிலான காலத்தின், கூட்டக் குறிப்பேட்டின் அனைத்து பக்கங்களின் ஒளிநகல்.

ஆ) ……….ஆம் தேது முதல் ……… ஆம் தேதி வரையிலான காலத்தில் மேற்கொண்ட சிவில் பணிகள், கட்டுமானங்கள், குழாய் இணைப்பு, தெருவிள்க்கு அமைத்தல், சாலை, பாலம் அமைத்தல், ஆழ்துளைக் கிணறுகள் அமைத்தல், கட்டிடங்கள் கட்டுதல் போன்ற புதிய மற்றும் பழுது பார்ப்புப் பணிகள் பட்டியல் மற்றும் ஒவ்வொன்றிற்கும் செய்யப்பட்ட செலவு குறித்தத் தகவல்

இ) பத்தி 1(ஆ) வின் பணிகள் ஒவ்வொன்றிற்கும் பெயர், அவை ஒவ்வொன்றின் திட்ட மதிப்பீடு, Detailed Estimate with specification, M.Book ஒவ்வொரு பணிக்கும் அளிக்கப்பட்டக் காசோலைகளின் எண்,தேதி, விலாசம், பணி முடிக்கப்பட்டது என்று M.Book சான்றளித்த அதிகாரியின் பெயர், அவரின் அன்றைய, தற்போதைய பதவி, அஞ்சல் விலாசம் ஆகிய தகவல்கள்

ஈ) பத்தி 1(ஆ) ல் குறிப்பிட்ட பணிகளில் குறைபாடுகள் இருந்தால், உடனே புகார் செய்ய, மாவட்ட, மாநில அதிகாரிகளின் பதவி, விலாசம், தொலைபேசி, கைபேசி, ஃபேக்ஸ் எண்கள், மின் அஞ்சல் முகவரிகள்.

2) கடந்த .....................ம் தேதி முதல் ...........ம் தேதி வரையிலான காலத்தில் பத்தி 1- (ஆ) – வில் குறிப்பிடப்பட்ட பணிகளுக்கு செய்யப்பட்ட செலவுக்கான (PAID VOUCHER) செலவு சீட்டுகளின் சான்றொப்பமிடப்பட்ட ஒளி நகல்

3) மேற்படி அமைப்பின், தலைவர், தேர்தலின் போது அளித்த சொத்து விவரப்பட்டியலின் ஒளி நகல்

4) மேற்படி அமைப்பின், அனைத்து வரவுகள் பதிவேட்டின்........முதல்.......வரையிலான காலத்தின் ஒளிநகல்

5) மேற்படி அமைப்பின்..........ம் தேதி முதல் ...................ம் தேதி வரையிலான வங்கி பாஸ் புத்தகங்களின் ஒளிநகல் 

6) மேற்படி அமைப்பின் மிது உடனடி நிர்வாகக் கட்டுப்பாடு உள்ள அலுவலராக, ஒன்றி ஆணையாளராகப்......ம் தேதி முதல் .......தேதி வரை பணியாற்றிய அலுவலர்களின் பெயர், பணியாற்றியக் காலம் தற்போதைய முகவரி

7) மேற்படி அமைப்பின், எல்லையில் “மணல்” எடுத்தது, “கல் குவாரி”, “மரங்கள் ஏலம்” , வாகனங்கள் நிறுத்துமிடம் ஏலம், சந்தை ஏலம் ஆகிய இனங்களில் வந்த தேதி வாரியான வரவு, அதை வங்கியில் செலுத்தியதைக் காட்டும் முத்திரையிடப்பட்ட வவுச்சர் நகல்


8.)  மேற்படி அமைப்பில் வண்ணத் தொலைக்காட்சி பெட்டி; மற்றும் இலவச காஸ் அடுப்பு; குடிசைக்குப் பதிலாக காங்கிரீட் வீடு வழங்க தயாரிக்க்ப்பட்ட பயனாளிகளின் பட்டியல்

9) பத்தி 8-ல் குறிப்பிட்ட பயன்கள் இது வரை மேற்படி அமைப்பில் இது வரை பெறாத குடும்பங்களின் பட்டியல்

எனக்கு இணையதள வசதியும் திறமையும் இல்லை. கோரியத் தகவல்களை அஞ்சலில் அனுப்பி வைக்கக் கோருகிறேன்.
பிற அலுவலகத்திலிருக்கும் தகவல்களுக்கு சட்டபிரிவு 6(3) ன்படி நடவடிக்கைக் கோருகிறேன். இந்த விண்ணப்பத்திற்கானக் கட்டணமாக ரூ.10/- க்கான நீதிமன்றக் கட்டண வில்லை ஒட்டப்பட்டுள்ளது என்றும் கனிவுடன் தெரிவித்துக்கொள்கின்றேன்.

தங்கள் உண்மையுள்ள,

No comments:

Post a Comment